ஐ லவ் யூ அம்மா! 2015 பாரீஸ் தாக்குதல் தீவிரவாதியின் கடைசி மெசேஜ்

Report Print Raju Raju in பிரான்ஸ்
411Shares
411Shares
lankasrimarket.com

2015-ஆம் ஆண்டு பாரீஸில் நடந்த தீவிரவாத தாக்குதலின் போது உயிரிழந்த தீவிரவாதி தனது தாயிடம் கடைசியாக ஸ்கைப் மூலம் மெசேஜ் அனுப்பிய விபரம் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த 2015-ஆண்டு செப்டம்பர் 13-ஆம் திகதி மூன்று தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 90 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் நடந்து இன்றுடன் இரண்டாண்டுகள் நிறைவு பெறுகிறது, தாக்குதலில் ஈடுபட்ட பவுத் முகமது அகாத் (23) என்ற தீவிரவாதியை தாக்குதலுக்கு பின்னர் பொலிசார் சுட்டு கொன்றனர்.

முகமது உயிரிழப்பதற்கு முன்னர் கடைசியாக தனது தாயுடன் செல்போனில் உள்ள ஸ்கைப் மூலம் தகவல் பரிமாறியுள்ளார்.

முதலில் ஐ லவ் யூ என தாய்க்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். பல வாரங்களாக மகனிடமிருந்து தகவல் வராத நிலையில் தீடீரென இந்த மெசேஜை பார்த்த முகமதின் தாய், உடனடியாக, நீ எப்படி இருக்கிறாய், உன்னை மிகவும் நேசிக்கிறேன் என பதில் அனுப்பியுள்ளார்.

பின்னர், நான் விரைவில் அல்லாவை சந்திக்கவுள்ளேன், எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள். என் மனைவியுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என முகமது, தாய்க்கு மெசேஜ் அனுப்பினார்.

அதற்கு, உன் மனைவிக்கு போன் செய்தால் அவர் எடுக்கவில்லை எனவும், மகனே ஐ லவ் யூ எனவும் தாய் கூறியுள்ளார்.

உடனடியாக, நானும் தான் அம்மா என முகமது மெசேஜ் செய்த அடுத்த 5 வினாடிகளில் பொலிசார் அவரை சுட்டு கொன்றுள்ளனர்.

முகமது பயன்படுத்திய போனை பின்னர் ரத்த கறை படிந்த நிலையில் அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்