திருடர்களுக்கு இந்த கார் தான் ரொம்ப பிடிக்குமாம்: பட்டியல் வெளியானது

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சில் திருடுபோயுள்ள கார்களில் அதிகளவில் திருடு போன கார்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.

பிரான்சில் ஜூலை 2016ல் இருந்து ஜூன் 2017ம் ஆண்டு காலகட்டத்தில் சுமார் 1,08,000 கார்கள் திருடு போயுள்ளன என பிரெஞ்சு ஓட்டுனர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒரு கார் திருடு போகிறது. திருடு போயுள்ள கார்கள் வெளிநாடுகளில் விற்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் 52 சதவீத கார்கள் தெருக்களிலும், 31 சதவீதம் கார் பார்க்கிங்கிலும், 12 சதவீதம் பட்டறைகளிலும் நிறுத்தப்பட்டிருந்தவை.

அதிக அளவில் திருடப்பட்ட கார்களின் பட்டியல்

  1. Smart Fortwo II
  2. Land Rover Range Rover
  3. Land Rover Range Rover Evoque
  4. Ford Fiesta
  5. Renault Clio 4
  6. Seat Leon
  7. Citroën DS3 Découvrable
  8. Renault Twingo II
  9. Renault Mégane 2
  10. BMW X5 E70/LCI

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்