தீவிபத்தில் 95 சதவீதம் கருகிய இளைஞரின் தோல்கள்: சகோதரரின் நெகிழ்ச்சி உதவி

Report Print Raju Raju in பிரான்ஸ்
166Shares

தீ விபத்தில் இளைஞர் ஒருவரின் உடல்தோல் 95 சதவீதம் கருகிய நிலையில் பல்வேறு ஆப்ரேஷன்களுக்கு பிறகு அவர் உடல் நலம் தேறி வருகிறார்.

பிரான்ஸை சேர்ந்தவர் ப்ராங்க் (33), இவர் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தான் வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கினார்.

இதில் ப்ராங்கின் 95 சதவீத உடலில் தீக்காயம் ஏற்பட்டது. இதையத்து அவருக்கு தோல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து ப்ராங்கின் எரிந்த தோல்கள் நீக்கப்பட்டு அவரின் இரட்டை சகோதரரான எரிக் ஸ்கால்ப்பின் தோல்கள் முக்கிய பகுதிகளில் பொருத்தப்பட்டன.

மரபணு ரீதியாக எரிக் தோல்கள் பொருந்தியதால் ப்ராங்குக்கு பொருத்தப்பட்டது.

பின்னர் மற்ற பகுதிகளுக்கான தோல்கள் மருத்துவ முறையில் தானாக வளரும் படி சிகிச்சையளிக்கப்பட்டது.

இதுவரை ப்ராங்குக்கு 10 ஆப்ரேஷன்கள் நடந்துள்ள நிலையில் தற்போது உடல் நலம் தேறி வருகிறார்.

இது குறித்து அவருக்கு சிகிச்சையளித்த பாரீஸின் செயிண்ட் லூயிஸ் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் மீமைவுன் கூறுகையில், பொதுவாக இறந்தவர்களின் தோல்களை தான் இது போன்ற சிகிச்சைக்கு எடுத்து கொள்வோம்.

ஆனால் மரபணு ரீதியில் எரிக் தோல் ஒத்துபோனதால் அதை வைத்து சிகிச்சையை தொடங்கினோம்.

தற்போது ப்ராங்க் தனது வழக்கமான பணிகளை செய்து கொண்டு உடல் நலம் தேறி வருகிறார்.

முக்கியமாக அவருடைய முகம் நன்றாக குணமாகிவிட்டது என கூறியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்