சர்க்கஸிலிருந்து தப்பி பாரீஸ் சாலைக்கு வந்த புலி: சுட்டு கொன்ற உரிமையாளர்

Report Print Raju Raju in பிரான்ஸ்
256Shares
256Shares
lankasrimarket.com

சர்க்கஸிலிருந்து தப்பி பாரீஸ் சாலையில் அலைந்து திரிந்த புலியை அதன் உரிமையாளரே சுட்டு கொன்றுள்ளார்.

பிரான்ஸின் பாரீஸில் போர்மன் மோரேனோ என்ற சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் சர்க்கஸிலிருந்த 200 கிலோ எடை கொண்ட புலி ஒன்று அங்கிருந்து தப்பி சாலைக்கு நேற்றிரவு வந்துள்ளது.

சாலையில் அலைந்து திரிந்த புலி பின்னர் ரயில் நிலையம் அருகில் சென்றதால் அங்கிருந்தவர்கள் உடனடியாக பாதுகாப்பு கருதி வெளியேறினார்.

அதே போல டிராம் சேவையும் சிறிது நேரம் முடக்கப்பட்டது. சாலையில் இருந்த யாரையும் புலி சீண்டாத நிலையில் அதன் உரிமையாளரே அதை சுட்டு கொன்றுள்ளார்.

இதையடுத்து அனைத்து ஆபத்தும் முடிந்து விட்டது என பாரீஸ் பொலிசார் டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்ட புலியின் புகைப்படம் சமூகவலைளத்தில் வேகமாக பரவி வருகிறது.

சர்க்கஸிலிருந்து புலி எப்படி தப்பித்தது என தெரியாத நிலையில், அதன் உரிமையாளரிடம் பொலிசார் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்