இளம் நடிகைக்கு தயாரிப்பாளர் பாலியல் தொல்லை: கண்ணீர் மல்க புகார்

Report Print Raju Raju in பிரான்ஸ்
253Shares
253Shares
lankasrimarket.com

இளம் நடிகைக்கு பிரான்ஸில் வைத்து தயாரிப்பாளர் பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் அதை கண்ணீர் மல்க மீடியா முன்னால் நடிகை தற்போது தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய நடிகையான கேடியன் நோபிள் (31), செய்தியாளர்களை சந்தித்து கண்ணீர் மல்க தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து விவரித்தார்.

நோபிள் கூறுகையில், கடந்த 2014-ல் பிரான்ஸின் கேன்ஸ் நகரில் திரைப்படவிழா நடைப்பெற்றது.

இதில் நான் கலந்து கொண்ட நிலையில் அமெரிக்காவின் பிரபல தயாரிப்பாளரான ஹார்வே விஹின்ஸ்டெய்னும் கலந்து கொண்டார்.

அங்கு தன்னுடன் உறவு வைத்து கொண்டால் திரைப்படங்களில் வாய்ப்பு தருகிறேன் எனவும் இதற்கு ஒத்துழைத்தால் நல்ல வாழ்க்கை கிடைக்கும் எனவும் கூறி என்னிடம் எல்லை மீறி தவறாக நடந்து கொண்டதாக கண்ணீருடன் கூறியுள்ளார்.

ஏற்கனவே பல முன்னணி நடிகைகள் ஹார்வே மீது பாலியல் தொடர்பான புகார் அளித்துள்ள நிலையில் இது சம்மந்தமாகவும் அவர் மீது நியூயோர்க் பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்