குளிர்காலத்தினை முன்னிட்டு வீடில்லாதவர்களுக்கு தங்குமிடம்

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்ஸில் கடுமையான குளிர்காலம் இந்த வார இறுதியில் தொடங்க உள்ளதால் வீடில்லாதவர்களுக்கு தங்கும் இடம் திறக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் கடுமையான குளிர்காலம் இந்த வாரத்தில் தொடங்க உள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மக்களை மிகவும் பாதுகாப்பாக இருக்கும் படியும் பிரான்ஸ் அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், வீடில்லாதவர்கள் தங்குவதற்காக புதிதாக தங்குமிடம் ஒன்று பாரிஸில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பாரிஸின் 12ஆம் வட்டாரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த தங்குமிடம், பெண்கள், குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ, இந்த தங்குமிடங்களை உருவாக்கியதுடன், அவரே நேற்று திறந்து வைத்துள்ளார்.

சுமார் 10,000 பேர் தங்கக்கூடிய இந்த இடங்களில், 2000 படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் Seine-Saint-Denis மற்றும் Seine-et-Marne ஆகிய பகுதிகளிலும் தங்குமிடங்கள் விரைவில் திறந்து வைக்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தங்குமிடம் 2018ஆம் ஆண்டு வசந்த காலத்தில் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...