பொதுமக்களுக்கு புது சட்டத்தை பிறப்பித்த பாரிஸ்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
670Shares
670Shares
lankasrimarket.com

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தனியார் சொத்துக்களை வாடகைக்கு விடுவது தொடர்பில் புது சட்டம் ஒன்றை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

இதன்படி டிசம்பர் முதல் திகதி முதல் தொடர்புடைய அதிகாரிகளிடம் பதியப்படாத சொத்துக்களை தனியார் இணையதளம் வாயிலாக வாடகைக்கு விட முடியாது என தெரிய வந்துள்ளது.

தனியார் இணையதளமான Airbnb வாயிலாக பொதுமக்கள் தங்கள் கட்டிடங்களை தேவையானவர்களுக்கு வாடகைக்கு விடுவது நடைமுறையில் இருந்து வருகிறது.

தற்போது இந்த நடைமுறையில் இருக்கும் சிக்கல்களை போக்கும் வகையில் பாரிஸ்அதிகாரிகள் புது சட்டமொன்றை வெளியிட்டுள்ளனர்.

இதன்படி அக்டோபர் முதல் திகதி முதல் டிசம்பர் முதல் திகதி வரையான காலகட்டத்தில் வாடகைக்கு விடப்படும் தங்கள் சொத்துக்களை பொதுமக்கள் உரிய அதிகாரிகளிடம் பதிவு செய்ய வேண்டும்.

குறித்த சட்டமானது ஆண்டில் சில வாரங்களுக்கு மட்டும் வாடகைக்கு விடப்படும் குடியிருப்பாக இருந்தாலும் அதன் உரிமையாளருக்கு பொருந்தும்.

வாடகைதாரர்களே குறித்த உரிமையாளருக்கு தெரியாமல் மீண்டும் வாடகைக்கு விடப்படும் சிக்கல்களை களையவே இந்த புது சட்டம் அமுக்கு வருகிறது.

இதனால் தனியார் நிறுவனங்களால் வாடகைக்கு விடப்படும் சொத்துக்களை அதன் பதிவு எண்ணை பயன்படுத்தி அதிகாரிகளுக்கு கண்காணிக்க முடியும்.

கடந்த 2015 ஆம் ஆண்டு அரசு அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் நாட்டில் உள்ள 44 சதவிகித குடியிருப்புகள் ஆண்டு முழுவதும் வாடகைக்கு விடப்பட்ட நிலையிலே இருந்ததை அடுத்தே இந்த புது சட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்