எங்கு பார்த்தாலும் பனிப்பொழிவு: வெள்ளை வெளேரென காட்சியளிக்கும் பிரான்ஸ்

Report Print Raju Raju in பிரான்ஸ்
490Shares
490Shares
lankasrimarket.com

பிரான்ஸின் பல பகுதிகளில் பனிக்கொட்டும் நிலையில் அது சம்மந்தமான வீடியோவும், புகைப்படங்களும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

பிரான்ஸில் குளிர்காலம் தொடங்கியதையடுத்து அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதையடுத்து பல இடங்களில் பனிக்கொட்டி வருகிறது, நாட்டின் Haute-Savoie பகுதியில் அமைந்திருக்கும் அனீசி ஏரியை சுற்றி பனி சூழ்ந்துள்ளது.

மத்திய பிரான்ஸில் உள்ள அலீர் பகுதியில் எங்கு பார்த்தாலும் பனிகள் தான் உள்ளன.

பல இடங்களில் உள்ள வீடுகள் மீது பனி சூழ்ந்து மொத்த இடமும் வெள்ளையாக காட்சியளிக்கிறது.

இது போன்ற நிலையே நாட்டின் பல பகுதிகளில் இருந்து வருகிறது, இது சம்மந்தமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது.


மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்