5 குழந்தைகளை கொன்று புதைத்த தாய் கைது

Report Print Gokulan Gokulan in பிரான்ஸ்
232Shares
232Shares
ibctamil.com

பிரான்ஸ் நாட்டில் தனக்கு பிறந்த 5 குழந்தைகளை கொன்று புதைத்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மல்ஹவுஸ் நகரில் வசித்து வருபவர் சில்வி(வயது 53), சமீபத்தில் இவருக்கும் அக்கம் பக்கத்தினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அக்கம்பக்கத்தினர் சில்வி, 14 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு பிறந்த 5 குழந்தைகளை கொன்று வீட்டிற்கு பின்னால் உள்ள காட்டில் புதைத்துள்ளதாக பொலிசில் புகார் செய்தனர்.

இதனைதொடர்ந்து வழக்கு பதிவு செய்து பொலிசார் விசாரணையை தொடங்கிய நிலையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது.

சில்வியின் வீட்டிற்கு பின்னால் உள்ள காட்டில் ஆய்வு செய்தபோது 4 குழந்தைகளின் சடலம் கண்டெடுக்கப்பட்டது, கடைசி குழந்தையின் சடலம் சில்வியின் வீட்டில் கண்டெடுக்கப்பட்டது.

பிரேதப்பரிசோதனையில் இரண்டு குழந்தைகள் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த கொலைகள் 1993- 1995 மற்றும் 2003- 2005 ஆம் ஆண்டுகளில் நடந்திருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.

மேலும் டிஎன்ஏ(DNA) சோதனையின் மூலம் புதைக்கப்பட்டுள்ளது சில்வியின் குழந்தைகள் தான் என பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

இதுகுறித்து வழக்கறிஞர் டோம்னிக் கூறுகையில், இது அனைத்தும் குறித்த பெண்ணின் கணவருக்கு தெரியாமல் நடந்துள்ளது என்றும், கொலைக்கான காரணங்கள் தெளிவாக இல்லை என்றும் கூறியுள்ளார்.

குற்றத்தை சில்வி ஒப்புக்கொண்டுள்ள நிலையில், ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என சட்டநிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதேபோல் ஜேர்மனியில் குழந்தைகளை மூச்சு திணறடித்து கொலை செய்த பெண்ணுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்