ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த பிரான்சின் பிரபல நிறுவனம்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
230Shares
230Shares
lankasrimarket.com

பிரான்ஸ் மற்றும் சுவிஸ் நாட்டவர்கள் இணைந்து நடந்தும் பிரபல சிமெண்ட் தொழிற்சாலை ஒன்று ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி அளித்து வருவதாக கண்டறியப்படுள்ளது.

குறித்த நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் சிலர் சிரியாவில் உள்ள ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி அளித்து வந்துள்ளதை அந்த நிறுவனத்தின் வழக்கறிஞர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

பிரான்சில் செயல்பட்டுவரும் Lafarge என்ற பிரபல சிமெண்ட் தொழிற்சாலையே குறித்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ளது.

இவர்களது தொழிற்சாலை ஒன்று சிரியாவின் வடபகுதியில் உள்ள ஜலாபியாவில் செயல்பட்டு வந்த நிலையில், ஐ.எஸ் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு பயந்து அவர்களுக்கு நிதி உதவி அளித்து வந்ததாக குறப்படுகிறது.

மட்டுமின்றி கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் போலியான ஆவணங்களை தயார் செய்து ஐ.எஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து குறித்த நிறுவனம் எரிபொருட்களையும் கொள்முதல் செய்துள்ளது.

2014 ஆம் ஆண்டு குறித்த நிறுவனத்தின் மேலாளராக Frederic Jolibois பொறுப்பேற்றதன் பின்னரே இதுபோன்ற நடவடிக்கைகளில் அந்த நிறுவனம் ஈடுபட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

இவருடன், குறித்த நிறுவனத்தின் முன்னாள் மேலாளர் Bruno Pescheux, Lafarge நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரியாக செயல்பட்ட Jean-Claude Veillard ஆகியவர்களும் குறித்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ளனர்.

Lafarge சிமெண்ட் தொழிற்சாலை சிரியாவில் தொடர்ந்து இயங்க மாதம் 84,000 யூரோ வரை ஐ.எஸ் பயங்கரவாதிகள் பெற்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் மேலதிக ஆதாரங்களை திரட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்