மூடுவிழா காணும் பிரான்சின் கடைசி ஆபாச பட திரையரங்கம்: என்ன காரணம் தெரியுமா?

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
591Shares
591Shares
lankasrimarket.com

பிரான்ஸ் தலைநகர் பாரிசின் கடைசி ஆபாச பட திரை அரங்கம் இந்த மாத இறுதியுடன் மூடுவிழா காண உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாரிசில் ஆபாச திரைப்படங்களை மட்டுமே திரையிட்டு வந்த Beverley எனும் பிரபல திரையரங்கம் இந்த மாத இறுதியுடன் மூடுவிழா காண உள்ளது.

74 வயதான அதன் நிர்வாகி Maurice Laroche இந்த முடிவை அறிவித்துள்ளார். 1993 ஆம் ஆண்டு குறித்த திரை அரங்கத்தை வாங்கியது முதல் இந்த நாள் வரை மிகுந்த உற்சாகத்துடனே பணி புரிந்ததாக கூறும் Laroche,

இணையதளத்தில் அதிகரித்துள்ள ஆபாச திரைப்படங்களால், திரை அரங்கில் வரும் ரசிகர்களின் எண்ணிக்கை பெருமளவு சரிந்ததை அடுத்தே இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் வாரத்துக்கு 600 டிக்கெடுகள் விற்பனையானாலே மிகுந்த மகிழ்ச்சியை தருவதாக உள்ளது என கூறும் அவர்,

20 ஆண்டுகளுக்கு முன்னர் இது 1,500 முதல் 1,600 என இருந்தது என்றார். 1980 காலகட்டத்தில் பாரிசில் மட்டும் சுமார் 20 ஆபாச பட திரையரங்கம் செயல்பட்டு வந்ததாக கூறும் Laroche,

பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தொடர்ந்து திரைப்படங்களை கண்டுகளிக்க வருகை தருபவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்