உணவால் வாடிக்கையாளர்களை கவர்ந்த நிர்வாண உணவகம்

Report Print Deepthi Deepthi in பிரான்ஸ்
509Shares

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் திறக்கப்பட்டுள்ள நிர்வாண உணவகம் வாடிக்கையார்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு மட்டுமல்லாமல் அங்கு வழங்கப்படும் உணவுகளும் வாடிக்கையாளர்களுக்கு பிடித்த உணவாக உள்ளது.

O'naturel எனப்பெயரிடப்பட்டு இந்த உணவகம் தென்மேற்கு பாரிஸில் அமைந்துள்ளது. இங்கு வழங்கப்படும் உணவுகளுக்கு classic French கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

foie gras மற்றும் snails with parsley cream sauce - யின் விலை $57.50 ஆகும். மாட்டுக்கறி உணவும் வழங்கப்படுகிறது. இரவு நேர உணவுக்கு 40 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவு நேர உணவுக்கு மட்டும் €30 வசூலிக்கப்படுகிறது.

இந்த உணவகத்தில் உணவருந்திய தொழிலதிபர்கள் Mike மற்றும் Stephane Saada ஆகிய இருவரும் கூறியதாவது, இதனை நிர்வாணமாக அமர்ந்து சாப்பிடவதற்கு ஒரு வாய்ப்பாக கருதாமல், பணம் ஈட்டுவதற்கான ஒரு வாய்ப்பாகவே கருத வேண்டும்.

அதிகம் சுற்றுலா பயணிகள் வரும் பாரிஸில் இதுபோன்ற உணவகம் அதிக வருவாயை ஈட்டுவதற்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது என கருத்து தெரிவித்துள்ளனர்.

நவம்பர் மாதம் வெப்பமாக இருக்கும் என்பதால் கடற்கரை பகுதிகளில் இந்த உணவகத்தை அமைக்க திட்டமிட்டிருப்பதாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். வெயில் காலங்களில் மட்டுமே மக்கள் களைப்பாறுவதற்காக நிர்வாணமாக நீச்சல் குளங்களையும், ஆறுகளையும் தேடிச்செல்வார்கள்.

அப்படியிருக்கையில், வெப்பரீதியான தாக்குதலை மனிதர்களின் உடல் எதிர்கொள்ளும்போது அவர்கள் இதுபோன்ற உணவகத்தை விரும்புவார்கள் என கூறியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்