பள்ளிப்படிப்பை பாதியில் கைவிடும் பிரான்ஸ் இளைஞர்கள்: காரணம் என்ன?

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

பிரான்சில் பள்ளிப்படிப்பை பாதியில் கைவிடும் இளைஞர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

பிரான்சில் ஆண்டுதோறும் சுமார் 100,000 இளைஞர்கள் தங்கள் பள்ளிப்படிப்பை பாதியில் விட்டுவிடுவதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி ஆண்டு தோறும் 10 விழுக்காடு மாணவர்கள் எந்த பாடத்திலும் தேர்ச்சி பெறாமல் தங்கள் பள்ளிப்படிப்பை முடித்து வெளியேறுவதாகவும் தெரிய வந்துள்ளது.

இதனால் அடிப்படை கல்வித்தகுதி ஏதும் இல்லாத இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

பொதுவாக பார்க்கும்போது இந்த எண்ணிக்கை அதிகமாக தெரியலாம், ஆனால் எஞ்சிய ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில் இது பெரிதல்ல என ஆய்வாளர் Pierre-Yves Bernard தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் இளைஞர்கள் பள்ளீப்ப்டிப்பை பாதியில் விட்டுவிடுவதற்கு முக்கிய காரணியாக கருதப்படுவது, மிகவும் ஏழ்மையான பகுதியில் இருந்து வரும் மாணவர்கள், அல்லது ஒற்றை பெற்றோரை கொண்ட மாணவர்கள் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மட்டுமின்றி தற்போதைய இளைஞர்கள் தங்கள் பாடசாலைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை எனவும் கூறப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் பாடத்திட்டமானது உயர்ந்தோருக்குரியது என குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் நிலையில் திறமையான மாணவர்களை மட்டுமே ஊக்குவிக்கப்படுவதாகவும், எஞ்சிய மாணவர்களை கைவிடுவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மாணவர்களின் இந்த நிலைக்கு ஆசிரியர்களும் முக்கிய காரணம் எனவும், அவர்கள் வெறுமனே பாடம் நடத்துவதை மட்டுமே செய்கின்றனர் எனவும் ஆய்வாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்