என்னை மிகவும் கவர்ந்த மகாபாரதமும் மகாத்மா காந்தியும்: பிரான்ஸ் ஜனாதிபதி புகழாரம்

Report Print Harishan in பிரான்ஸ்

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் இந்திய சுற்றுப் பயணம் அடுத்த ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் பல புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார், இதன் தொடர்ச்சியாக இந்திய அரசுடன் இணைந்து சர்வதேச சோலார் ஒப்பந்தம் குறித்த திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்பட்டது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், டிசம்பர் மாதம் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சுற்றுப் பயணாமாக இந்தியா வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

தற்போது அந்த பயணத்திட்டம் 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து ஜனாதிபதி மக்ரோன் கூறுகையில், இந்தியாவின் ‘Make in India' திட்டத்தைப் போலவே பிரான்ஸிலும் 'Produce in France and Save the Planet' திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் பல திட்டங்களில் இந்தியாவுடன் கொள்கை ஒற்றுமைகள் ஏற்பட காரணம் மகாபாரதம் கூறும் நல்ல கருத்துகளை தெரிந்து கொண்டது தான் என தெரிவித்துள்ளார்.

மேலும் மகாத்மா காந்தியின் ஒற்றுமை குறித்த பல வரலாற்று சிறப்புமிக்க பேச்சுகளை படித்துள்ளதாகவும், அந்த கருத்துகள் தன்னை பெரிதும் கவர்ந்ததாகவும் கூறியுள்ளார்.

பொருளாதார மாணவரான மக்ரோன், இந்திய பொருளாதார மேதை அமிர்தியா சென்னையும் பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா- பிரான்ஸ் இடையேயான இந்த கொள்கை ஒற்றுமை இரு நாடுகளின் முன்னேற்றத்திற்காகவும் பயன்படும் என கூறியுள்ள மக்ரோனின் இந்தியப் பயணம் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்