பிரான்ஸில் அகதிகள் தங்கும் கட்டிடத்தில் தீவிபத்து

Report Print Raju Raju in பிரான்ஸ்

பிரான்ஸில் அகதிகள் அடிக்கடி வந்து தங்கும் கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துள்ளனர்.

நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கிராண்டி - சின்ந்தி நகராட்சியில் தான் இச்சம்பவம் செவ்வாய் கிழமை மாலை 3.15 மணியளவில் நடந்துள்ளது.

அங்குள்ள புகழ்பெற்ற லிரோய் மெர்லின் நிறுவன கட்டிடத்துக்கு எதிரில் யாரும் அதிகாரபூர்வமாக பயன்படுத்தாத ஒரு கட்டிடத்தில் திடீரென தீப்பிடித்தது.

சம்பவம் குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தரப்பட்ட நிலையில் உடனடியாக வந்த அவர்கள் கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.

தீப்பற்றிய கட்டிடத்தின் அருகில் வசிக்கும் நபர்கள் கூறுகையில், சில ஆண்டுகளாக இந்த கட்டிடத்தை யாரும் உபயோகப்படுத்தவில்லை, ஆனால் தங்க இடம் இல்லாத அகதிகள் அடிக்கடி இங்கு வந்து தங்குவார்கள் என கூறியுள்ளனர்.

கட்டிடம் தீப்பற்றியதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்