சர்ச்சையில் சிக்கிய பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி

Report Print Raju Raju in பிரான்ஸ்
332Shares
332Shares
ibctamil.com

பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் மனைவி தங்கியிருந்த பங்களா வாசலில் நின்றிருந்த பாதுகாவலர்கள் மழையில் நனைந்து ஒதுங்க இடம் இல்லாமல் தவித்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் லி டவுக்குயிட் மண்டலத்தில் மேக்ரானின் பங்களா அமைந்துள்ளது, அங்கு எப்போதும் பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவார்கள்.

இந்நிலையில் மேக்ரான் மனைவி பிரிஜ்ஜிட் பங்களாவில் தங்கிருந்த நிலையில் வீட்டுக்கு வெளியில் பாதுகாவலர்கள் இருந்துள்ளனர்.

அப்போது அங்கு மழை பெய்ததால் பாதுகாவலர்கள் ஒதுங்க இடம் கிடைக்காமல் நனைந்துள்ளனர்.

பாதுகாவலர்களில் ஒருவர் மழையில் நனையாமல் இருக்க அங்குள்ள காரில் ஏறி உட்கார்ந்துள்ளார்.

இதையடுத்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது, அதாவது அதிகாரிக்கு அபராதம் விதிக்கப்படலாம் என தெரிகிறது.

இந்நிலையில், தாங்கள் வலுக்கட்டாயமாக மழையில் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டோம் என பாதுகாவலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதற்கு காரணம் பிரிஜ்ஜிட் தான் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து UNSA பொலிஸ் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேக்ரானின் பங்களாவின் முன்பக்கத்தின் நிலைமை எப்படியுள்ளது என தற்போது தெரியவந்துள்ளது.

மழைக்காலத்தில் இது போன்ற விடயம் நடந்ததற்கு நாங்கள் கண்டனம் தெரிவித்து கொள்கிறோம்.

பாதுகாவலர்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு இது போன்ற பிரச்சனைகள் வருங்காலத்தில் நிகழாமல் இருக்க அவர்கள் ஒதுங்குவதற்கு சிறிய வீடு போன்ற இடத்தை உடனடியாக அமைத்து தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த சர்ச்சை தொடர்பாக மேக்ரான் அலுவலகம் கருத்து கூற மறுத்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்