அமெரிக்காவின் தீவிரவாத பட்டியலில் பிரான்ஸ் நாட்டு பெண்

Report Print Fathima Fathima in பிரான்ஸ்
109Shares
109Shares
ibctamil.com

அமெரிக்க தீவிரவாத பட்டியலில் இடம்பெற்றுள்ள பிரான்ஸ் நாட்டுப் பெண் சிரியாவில் காவலில் வைக்கப்பட்டார்

ஐஎஸ் இயக்கத்துக்காக ஆள் சேர்ப்பதாக சந்தேகிக்கப்பட்ட Emilie Koenig என்ற பிரான்ஸ் பெண், கடந்த 2014ம் ஆண்டு சிரியாவுக்கு சென்றார்.

அங்கு அவருக்கு மூன்று பிள்ளைகள் பிறந்ததுடன், ஐஎஸ் இயக்கத்தின் பிரச்சார வீடியோக்கள் பலவற்றிலும் தோன்றியுள்ளார்.

பிரெஞ்சு நிறுவனங்கள் மீதும் பிரான்ஸ் படை வீரர்களின் மனைவிகள் மீதும் தாக்குதல் நடத்தும்படி தனது கூட்டாளிகளைத் தூண்டிய Koenig-வின் தொலைபேசி உரையாடல்களை உளவுத்துறை கண்டுபிடித்தது.

இதனைதொடர்ந்து அமெரிக்க மற்றும் ஐக்கிய நாடுகளில் தீவிரவாத பட்டியலில் இடம்பெற்றார்.

இந்நிலையில் தற்போது Koenig சிரியாவில் குர்திஷ் படைகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது தாயார் தெரிவித்தார்.

மேலும் Koenig பிரான்சுக்கு வந்து குடும்பம், நண்பர்கள் மற்றும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க விரும்பியதாகவும், இதுதொடர்பில் பிரான்ஸ் வெளிவிவகாரத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

இவரை போன்று பலரும் சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்