பனியில் உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பிரித்தானிய இளைஞரின் உடல்: கொலையா? தற்கொலையா?

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
209Shares
209Shares
ibctamil.com

பிரான்சில் பனியில் உறைந்த நிலையில் பிரித்தானிய இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Coventry நகரத்தைச் சேர்ந்த 22 வயதான Owen Lewis என்ற இளைஞர் பிரான்சில் பனியில் உறைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிரான்சில் உள்ள ஆல்ப்ஸ் மலையடிவாரத்தில் அமைந்துள்ள மதுபான விடுதி ஒன்றில் கடைசியாக குறித்த இளைஞர் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் செவ்வாய் அன்று மாலை குறித்த இளைஞர் அவர் தங்கியிருந்த குடியிருப்புக்கு திரும்பாத நிலையில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனையடுத்து மீட்பு குழுவினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர். ஆனால் குறித்த இளைஞர் தொடர்பில் எந்த தகவலும் பொலிசாருக்கு கிட்டவில்லை.

இந்த வெள்ளியன்று மாலை 5 மணியளவில் ஹெலிகொப்டரில் தேடுதலில் இறங்கிய பொலிசார் குறித்த இளைஞரின் உடலை கண்டுபிடித்துள்ளனர்.

Risoul பகுதியில் தங்கியிருந்த அவர் நண்பர்களுடன் பனிச்சறுக்கு விளையாட Yeti பகுதியில் காத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் Yeti-ல் இருந்து தவறான பாதைக்கு திரும்பிய அவர் வழி மாறியதால் பனியில் சிக்கி உயிரிழக்க நேர்ந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்