வாடகையை ஒழுங்காக செலுத்தாததால் மல்லிகா ஷெராவத் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டாரா?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
175Shares
175Shares
ibctamil.com

ஒரு காலத்தில் ஹிந்தி சினிமாவின் கவர்ச்சி நடிகையாக மட்டுமே அறியப்பட்ட மல்லிகா ஷெராவத் கமலுடன் தசாவதாரம் படத்திலும், சிம்புவுடன் ஒஸ்தி படத்திலும் தலை காட்டிய பிறகு தமிழர்களுக்கும் அறிமுகமானார்.

இவரைப்பற்றி எப்போதும் ஏதாவது ஒரு பரபரப்புச் செய்தி வந்து கொண்டே இருக்கும்.

2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியான செய்தி ஒன்றில் பாரிசில், தனது ஆண் நண்பருடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த மல்லிகா ஷெராவத் அடையாளம் தெரியாத மூன்று நபர்களால் தாக்கப்பட்டதாக The Local பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

2017ஆம் ஆண்டு மே மாதம் Cannes திரைப்பட விழாவில் Georges Hobeika என்னும் பிரபல உடை வடிவமைப்பாளர் வடிவமைத்த இளஞ்சிவப்பு நிற கடல் கன்னி உடையில் கவனம் ஈர்த்தார்.

2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்க அதிபர் டிரம்பின் முதல் மனைவியுடன் அவர் எடுத்துக்கொண்ட செல்ஃபி பெரிதும் பேசப்பட்டது.

2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புகழ் பெற்ற தொலைக்காட்சி பிரபலமும், நகைச்சுவை நடிகையுமான Chelsea Handler உடனான அவரது நேர்காணலில் பெண்ணுரிமை குறித்து பேசியது பரபரப்புச் செய்தியானது.

தற்போது சர்வதேசப் பத்திரிகைகள் மீண்டும் ஒரு பரபரப்புச் செய்தியை வெளியிட்டுள்ளன. பாரிசில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தனது கணவராகிய Cyrille Auxenfans உடன் வசித்துவந்த மல்லிகா ஷெராவத், சரியாக வாடகை செலுத்தாததால் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டதாக பிரபல பிரான்சு பத்திரிகையான The Local செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் IANSக்கு அளித்துள்ள செய்தியில் மல்லிகா ஷெராவத் இதை மறுத்துள்ளார். தனக்கு பாரிசில் வீடோ, வங்கிக் கணக்கோ இல்லையென்றும் தான் மும்பையில்தான் வசிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Cyrille Auxenfansஐ தான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் தெரிவித்த அவர், பாரிசில் நடைபெற்ற ஒரு சம்பவத்தில் தனது பெயர் ஏன் தேவையில்லாமல் இழுக்கப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.

தற்போது ஜீனத் என்னும் பாலிவுட் படத்தில் நடித்து வரும் மல்லிகா ஷெராவத், Free a Girl அமைப்பின் தூதுவராகவும் உள்ளதால் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்