தமிழ்நாட்டில் பொங்கல் விழாவில் பிரான்ஸ் மாணவிகள்

Report Print Harishan in பிரான்ஸ்
483Shares
483Shares
ibctamil.com

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவிகள் இந்தியாவின் தமிழகத்தில் பொங்கல் கொண்டாடிய நிகழ்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சில ஆராய்ச்சி மாணவிகள் இந்தியாவின் கலாச்சாரங்களை ஆய்வு செய்வதற்காக இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி தமிழகத்தின் மதுரை பகுதியில் உள்ள அரிட்டாபட்டி கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

வெளிநாட்டு மாணவிகள் கலந்து கொள்வதால், விழாவிற்கான ஏற்பாடுகள் மிக சிறப்பாக செய்யப்பட்டிருந்த நிலையில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பொங்கல் விழா நடைமுறைகளைப் பற்றி விளக்கியுள்ளனர்.

இந்நிலையில் கிராமத்தின் வற்றாத குளமாகவும் தெய்வத்தின் தீர்த்தமாகவும் கருதப்படும் தர்மகுளத்தில் நீரை பானையில் பிடித்தும், அரிட்டாபட்டி பறைகளில் நெல் இடிக்கும் குழிகளில் நெல்களை கொட்டி அதில் கிடைத்த அரிசியினை கொண்டு பொங்கல் வைத்ததும் கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.

மேலும் அந்த விழாவில் கலந்து கொண்ட தமிழ் மாணவிகளுடன் சேர்ந்து சிலம்பம் சுற்றுதல், பாண்டியாடுதல் உள்ளிட்ட விளையாட்டுகளையும் பிரான்ஸ் மாணவிகள் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்