பாரிஸில் பரபரப்பை ஏற்படுத்திய நகைக் கொள்ளையில் 3 பேர் மீது வழக்குப் பதிவு

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
187Shares
187Shares
ibctamil.com

பாரிஸ் நகரில் பிரபல ஹொட்டல் ஒன்றில் நடந்த நகைக் கொள்ளை தொடர்பில் கைதான 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

பாரிஸின் பிரபல Ritz ஹொட்டலில் இருந்து 5 பேர் கொண்ட ஆயுதம் தாங்கிய கொள்ளை கும்பல் ஒன்று 4 மில்லியன் யூரோ மதிப்பிலான தங்க வைர நகைகளை கொள்ளையிட்டு தப்பினர்.

இதில் இரு கொள்ளையர்களை சம்பவ இடத்தின் அருகாமையில் இருந்தே பொலிசார் கைது செய்துள்ள நிலையில், அதே நாள் இன்னொருவரையும் பொலிசார் கைது செய்தனர்.

கைதான இந்த மூவர் மீதும் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வாரம் புதன்கிழமை நடந்த இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் பாரிஸ் பகுதியில் குடியிருப்பவர்கள் எனவும், 30 வயதை தாண்டியவர்கள் எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

பொலிசாரின் துரித நடவடிக்கையால் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மொத்தமும் மீட்கப்பட்டுள்ளது.

இருப்பினும் கொள்ளையில் தொடர்புடைய இருவர் இன்னமும் பொலிஸ் பிடியில் சிக்கவில்லை எனவும், அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்