பணக்கார ஆண்களை மயக்கி விஷம் வைத்துக் கொன்ற பெண்ணுக்கு சிறை

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
253Shares

பிரான்சில் பணக்கார முதியவர்கள் நால்வரை மயக்கி விஷ வைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட பெண்ணுக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

“Black Widow” என்று அழைக்கப்படும் இரண்டு மகன்களின் தாயான, பிரான்சு நாட்டைச் சேர்ந்த Patricia Dagorn தனது கணவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்துவந்தார்.

பணக்கார ஆண்களை மயக்கி அவர்களுக்கு விஷம் கொடுத்து அவர்களின் சொத்துக்களை பறிப்பது அவள் வழக்கம்.

அவ்வாறு விஷம் வைக்கப்பட்டதில் இருவர் உயிரிழந்தனர். சந்தேகத்தின் பேரில் பொலிசார் அவளது வீட்டை சோதித்தபோது 20 ஆண்களின் அடையாள அட்டைகள், வங்கிக் கணக்குகள் உட்பட ஏராளமான ஆவணங்கள் சிக்கின.

இவற்றின் அடிப்படையில் பொலிசார் விசாரணை மேற்கொண்டபோது பல உண்மைகள் வெளி வந்தன.

இந்நிலையில் அவளுக்கு எதிராக சாட்சியமளிக்க Robert Vaux, 91, மற்றும் Ange Pisciotta, 82 ஆகியோர் முன்வந்தனர்.

அரசு வழக்கறிஞர் Patriciaவுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கவேண்டும் என வாதாடினார்.

இறுதியில் நீதிபதிகள் அவளுக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.

தற்போது 55 வயதாகும் Patricia Dagorn தனது வாழ்வின் இறுதி வரை சிறையில் கழிக்க வேண்டியிருக்கலாம்.

Patricia Dagorn சட்டம் பயின்று பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்