பிரஞ்சு பெற்றோர்களுக்கு ஆபாசப்பட நடிகை விடுத்த முக்கிய கோரிக்கை

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

தங்கள் பிள்ளைகள் ஆபாச இணையதளங்களை பார்வையிடுவதை பெற்றோர்கள் கட்டுப்படுத்த வேண்டும் என பிரான்சின் பிரபல ஆபாசப்பட நடிகை நிகிதா பெலூசி கோரிக்கை விடுத்துள்ளார்.

பதின்வயது பருவத்தினரிடம் இருந்து தமக்கு ஏராளமான குறுஞ்செய்திகள் வருவதாகவும், பலர் மிக வக்கிரமாக தகவல் அனுப்புவதாகவும் அவர் கொந்தளித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக பேஸ்புக் பக்கத்தில் தகவல் பதிந்து ஏற்கெனவே விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்துள்ளதாக கூறும் நடிகை நிகிதா பெலூசி,

ஆனால் பரிதாபமாக இதுவரை தமக்கு இந்த விவகாரத்தில் எந்தவித ஆதரவும் கிடைத்ததில்லை எனவும் அவர் வருத்தமுடன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த வாரம் புதுவகை பிரசாரத்துடன் களம் இறங்கிய நிகிதா பெலூசி, தமக்கு இளம் வயதினர் அனுப்பிய தனிப்பட்ட செய்திகளையும் பிரசுரித்ததுடன்,

உங்கள் பிள்ளைகள் மீது அக்கறை உண்டா இல்லையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளாக தமக்கு தொடர்ந்து இளம் வயதினரிடம் இருந்து கடும் தொல்லை ஏற்படுவதாகவும், சிலர் முழு நிர்வாண புகைப்படம் கேட்டு நிர்பந்திப்பதாகவும் அவர் முறையிட்டுள்ளார்.

பிரஞ்சு இளைஞர்களை பாலியல் தொடர்பாக இதுவரை தாம் கல்வி புகட்டி வந்துள்ளதாகவும், தற்போது மிகவும் சோர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர்,

ஆனாலும் இதுவரை ஆபாச இணைய பக்கங்களை பார்வையிடும் இளையோரின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை எனவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

நடிகை நிகிதா பெலூசியின் குறித்த சமூக ஊடக பதிவு வைரலானதுடன் அவருக்கு எதிராக கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது,

மட்டுமின்றி சிலர் பாராட்டவும் செய்தனர். இந்த விவகாரத்தை பொதுமக்கள் முன்வைக்கும் முதல் நபரல்ல நடிகை பெலூசி, ஜனாதிபதி மேகரனும் இது தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் பிரான்ஸ் பெற்றோருக்கு நேரடியாகவே கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்