பிரான்சில் வெடிகுண்டுடன் சிக்கிய நபர்: பொலிசார் அதிரடி நடவடிக்கை

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
279Shares

பிரான்சில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர் என கருதப்படும் நபர் ஒருவர் வெடிப்பொருட்களுடன் சிக்கியுள்ளார்.

பிரான்சின் Nimes நகரில் கடந்த செவ்வாய் அன்று 33 வயதுடைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது குடியிருப்பில் இருந்து வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்களையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

பயங்கரவாத தொடர்புடையவர் என குற்றம்சாட்டப்பட்டுள்ள அவரது குடியிருப்பில் இருந்து ஏராளமான காணொளி பதிவுகளையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர். மட்டுமின்றி ஒரு காணோளியில் குறித்த நபர் ஐ.எஸ் தலைமை பொறுப்பாளருக்கு உறுதிமொழி அளிக்கும் காட்சிகளும் அடங்கியுள்ளது.

ஆனால் குறித்த நபர் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டாரா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,

இந்த ஆண்டின் முதல் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை இதுவெனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை ஐ.எஸ் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல்களால் பிரன்சில் 241 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்