கனவுக்கன்னி மர்லின் மன்றோவாக மாற உதட்டை மாற்றிய ரசிகர்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

தன் கனவுக்கன்னியான மர்லின் மன்றோவைப்போல் மாறுவதற்காக பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஹோட்டல் சர்வர் ஒருவர் இதுவரை 9,600 யூரோ செலவளித்துள்ளார்.

பிரான்சு நாட்டிலுள்ள Toulon நகரைச் சேர்ந்த 32 வயதான Cyril Roux ஹோட்டல் ஒன்றில் சர்வராகப் பணிபுரிகிறார்.

மர்லின் மன்றோவின் தீவிர ரசிகரான இவருக்கு அவரைப் போலவே மாறவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

இதனால் அதிக செலவு பிடிக்கும் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு மர்லின் மன்றோவைப்போல் மாற முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

கடந்த 18 மாதங்களில் இதுவரை 20 சிகிச்சைகளை மேற்கொண்டுள்ள இவர், தனது உதடுகளுக்காக மட்டும் 4,000 யூரோவையும் மற்ற சிகிச்சைகளுக்காக 5,600 யூரோவையும் செலவிட்டுள்ளார்.

அடுத்து தனது மூக்கையும், கன்னங்களையும், தாடையையும் கூட மர்லின் மன்றோவைப்போல் மாற்ற விரும்புகிறார். அதற்கு சுமார் 2,300 யூரோ தேவைப்படும் என்பதால், பணத்திற்காக காத்திருக்கிறார்.

பலர் நான் இப்படி இருப்பதற்காக என்னைப் பார்த்து சிரிக்கிறார்கள் என்பது எனக்குத்தெரியும், என்றாலும் எனக்கு இப்படி மாறுவது பெருமையாக இருக்கிறது, மற்றவர்கள் என்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை என்கிறார் இந்த ”ஆண் மர்லின் மன்றோ”.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்