மனைவியைக் கொன்று எரித்த கணவன்: மூன்று மாதங்களுக்கு பின் அம்பலமான உண்மை

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
393Shares
393Shares
ibctamil.com

பிரான்சில் மனைவியைக் கொன்று எரித்த கணவன் கைது செய்யப்பட்டார்.

29 வயது வங்கி ஊழியரான Alexia Davalஅக்டோபர் மாதம் 28ஆம் திகதி தனது காலை ஓட்டத்திற்காக வெளியில் சென்றார், அதன் பிறகு அவர் வீடு திரும்பவே இல்லை.

தனது மனைவியைக் காணவில்லை என அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் பொலிசார் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு வழக்கமாக Alexia Daval காலை ஓட்டத்திற்காக செல்லும் பாதையிலிருந்து வெகு தொலைவில் பாதி எரிந்த நிலையில் அவரது உடல் புதருக்குள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

போஸ்ட் மார்ட்டம் அறிக்கையில் அவர் கழுத்து நெறித்து கொல்லப்பட்டுள்ளது தெரியவந்தது.

அவரது கணவனை விசாரித்தபோது தங்களுக்குள் அவ்வப்போது வாக்குவாதங்கள் நடப்பது வழக்கம் என்று அவர் கூறினர்.

அவரது கையில் காணப்பட்ட கீறல்கள் மற்றும் பற்கள் பட்ட காயமும் அதனால்தான் ஏற்பட்டதாக அவர் கூறினார்.

இது தவிர வேறு எந்த ஆதாரங்களோ சாட்சியங்களோ பொலிசாருக்குக் கிடைக்கவில்லை.

திங்கட்கிழமை Alexia Davalஇன் கணவரான 34 வயது Jonathann Davalஐ பொலிசார் காவலில் எடுத்து விசாரித்தபோது மனைவியின் கொலைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர் கூறினார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை Jonathann Daval,தனது மனைவியின் சாவுக்கு தான்தான் காரணம் என்றும், தான் வேண்டுமென்றே செய்யவில்லை என்றும் கூறியுள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்து அது என்றும் அதற்காகத் தான் வருந்துவதாகவும் Jonathann Daval தெரிவித்ததாகவும் அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின்மை காரணமாக அவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்படுவதுண்டு என்று சிலர் கூறியுள்ள நிலையில், திருமண உறவுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி தவறுதலாக இச்சம்பவம் நடந்திருக்கலாம் என்று ஏற்கனவே பொலிசார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Jonathann Daval மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்