பிரான்ஸில் பள்ளிக்கூட பேருந்து மீது கனரக டிரக் வாகனம் மோதியதில் 16 வயதான மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நாட்டின் வடமேற்கில் உள்ள Morbihan பகுதியில் தான் இச்சம்பவம் நேற்று காலை 7.15 மணியளவில் நடந்துள்ளது.
அங்குள்ள பள்ளிக்கூடத்துக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் திடீரென பிரேக் தடைப்பட்டுள்ளது.
இதையடுத்து பேருந்து ஓட்டுனர் உள்ளிருந்த அனைத்து மாணவ, மாணவிகளையும் கீழே இறக்கிவிட்டுள்ளார்.
எல்லாரும் அங்கிருந்து கிளம்பி சென்ற நிலையில் 16 வயதான மாணவி மட்டும் தன் பெற்றோர் வருகைக்காக பேருந்து அருகிலேயே ஓட்டுனருடன் காத்திருந்துள்ளார்.
அந்த நேரத்தில் அவ்வழியாக வந்த கனரக டிரக் வாகனம் பேருந்து மீது வேகமாக இடித்த நிலையில் பேருந்து 20 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ஓட்டுனருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.