பிரெஞ்சு பயங்கரவாதியை நாடுகடத்த முடிவு: நீதிமன்றம் நடவடிக்கை

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் குழுவில் இணைந்து செயல்பட்ட பிரெஞ்சு பெண்மணியை நாடுகடத்த ஈராக் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈராக்கின் மொசூல் நகரில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார் 27 வயதான Melina Bougedir.

இவர் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் திங்களன்று 7 மாத கால சிறை தண்டனை விதித்து பாக்தாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சட்டவிரோதமாக ஈராக்கில் நுழைந்த குற்றம் மட்டுமே அவர் மீது சுமத்தப்பட்டிருந்ததால் அவருக்கு 7 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மொசூல் நகரில் தமது கணவருடன் வாழ்ந்து வந்ததாக கூறும் அவர், ஈராக் ராணுவத்தால் தமது கணவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அவரது கணவர் ஐ,எஸ் பயங்கரவாதிகளுக்கு உணவு சமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனிடையே கைதான மெலினா பாக்தாத் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரது 4 பிள்ளைகளில் 3 பேரை ஈராக் அதிகாரிகள் பிரான்ஸ் நாட்டுக்கு ஏற்கெனவே அனுப்பி வைத்துள்ள நிலையில்,

மெலினாவும் அவரது ஒரு குழந்தையும் பிரான்ஸ் நாட்டுக்கு நாடு கடத்தப்பட உள்ளனர்.

இது தொடர்பான நடவடிக்கைகளை ஈராக் அரசு மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்