பிரான்ஸை வலம் வர இருக்கும் மோனலிசா

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
151Shares
151Shares
lankasrimarket.com

500 ஆண்டுகளாக பாரீஸின் Louvre மியூசியத்திற்குள்ளேயே அடைந்து கிடக்கும் Da Vinci வரைந்த புகழ் பெற்ற மோனலிசா ஓவியம் பிரான்சை வலம் வர இருக்கிறது.

பிரான்சின் கலாச்சாரத்துறை அமைச்சரான Francoise Nyssen, போக்குவரத்து பொருட்காட்சியின் ஒரு பகுதியாக இந்த திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அதிபரை சந்தித்து இவ்விடயம் குறித்துப் பேச உள்ளதாகக் கூறும் அவர் இத்தகைய கலை வடிவங்கள் ஒரு இடத்திற்குள் அடைத்து வைக்கப்படக்கூடாது என்று தான் கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.

மந்திரப் புன்னகையோ என ஓவியர்களையே வியக்க வைக்கும் மோனலிசாவின் புன்னகை உலகெங்கிலுமுள்ள லட்சக்கணக்கான ரசிகர்களை ஈர்த்துள்ளது அனைவரும் அறிந்ததே.

வெளி நாடுகளுக்கு பயணம் செய்வதொன்றும் மோனலிசாவுக்கு புதிதில்லை. ஏற்கனவே 1911 ஆம் ஆண்டு இத்தாலியைச் சேர்ந்த திருடன் ஒருவன் இந்த ஓவியத்தைத் திருடிச் சென்று விட்டான்.

பின்னர் மீட்கப்பட்ட மோனலிசா ஓவியம் 1963 ஆம் ஆண்டு சில மாதங்கள் Washington மற்றும் New Yorkஇல் கழித்தது.

1974 ஆம் ஆண்டு Tokyo மற்றும் Moscowவையும் மோனலிசா ஒரு சுற்று சுற்றி வந்தாள்.

ஆனால் 2013 ஆம் ஆண்டு இத்தாலியின் Florence நகரம் மோனலிசா ஓவியத்திற்கு அழைப்பு விடுத்தபோது மட்டும் அந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை, ஒரு வேளை இத்தாலியர்கள்தான் முன்பு அதை திருடிச் சென்றனர் என்னும் கசப்பான உண்மை பிரான்சு நாட்டவர்களின் நினைவுக்கு வந்திருக்கக் கூடும்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்