பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இந்திய வைர வியாபாரிகளிடம் இருந்து சுமார் 300,000 யூரோ மதிப்பிலான வைரங்களை மர்ம நபர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
இந்திய வைர வியாபாரிகள் இருவர், வியாபாரம் தொடர்பான சந்திப்புக்கு பின்னர் பாரிஸ் மெட்ரோ ரயில் நிலையம் வந்துள்ளனர்.
அப்போது திடீரென்று 2 பேர் இவர்களை தாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மட்டுமின்றி இவர்களிடம் இருந்து வைரங்கள் அடங்கிய பெட்டியை பறித்துக் கொண்டு அந்த இருவரும் தப்பியுள்ளனர்.
பாரிஸில் வைர வியாபாரங்கள் மிகுதியாக நடைபெறும் பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது, திட்டமிட்ட சதியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக தலைநகர் பாரிஸ், வைர கொள்ளையர்களால் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.
ஜனவரி மாதம் ரிட்ஸ் ஹொட்டலில் கொள்ளையர் கும்பல் ஒன்று புகுந்து வைரங்களை அள்ளிச் சென்றனர். இந்த வழக்கில் 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு தொலைக்காட்சி நடிகை கிம் காதர்ஷியானை தாக்கி அவரது விலை உயர்ந்த வைர ஆபரணங்களை கொள்ளையிட்டு சென்றனர். அதன் மதிப்பு சுமார் 9 மில்லியன் யூரோ என விசாரணையில் தெரியவந்தது.