கர்ப்பிணி பெண்ணுக்கு அபராதம் விதித்த பாரிஸ் மெட்ரோ நிர்வாகம்: வெடித்த சர்ச்சை

Report Print Harishan in பிரான்ஸ்
370Shares
370Shares
lankasrimarket.com

பாரிஸ் ரயில் நிலையத்தை எளிதில் கடப்பதற்காக தவறான திசையை உபயோகித்த கர்ப்பிணி பெண் மீது மெட்ரோ நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பிரான்ஸின் பாரிஸில் உள்ள Concorde மெட்ரோ ரயில் நிலையத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் தவறான பாதையை உபயோகித்ததாக குறித்த ரயில் நிலைய நிர்வாகம், 60 யூரோக்கள் அபராதம் விதித்துள்ளது.

இந்த தகவலை தன் ட்விட்டர் பக்கத்தில் குறித்த பெண்ணின் கணவர் ஆதாரத்தோடு பதிவிட்டுள்ளார். அதில் ‘இந்த துணிவுக்கு சபாஷ்’ என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த ட்வீட் சமூகவலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து மெட்ரோ நிர்வாக பேச்சாளர் கூறுகையில், “தேவையற்ற விபத்துக்களை தவிர்க்கும் நோக்கில் ஒன்-வே விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டு வருகிறது. எனினும், இது போன்ற குற்றங்களுக்கான அபராதம் விதிக்கும் இறுதி முடிவுகள் ஆய்வாளர்கள் கைகளில் தான் உள்ளது” என கூறியுள்ளார்.

மேலும், முன்னணி பயணிகள் குழுவான FNAUT அமைப்பின் Michel Babut, இந்த நடவடிக்கை முற்றிலும் முட்டாள் தனமானது என விமர்சித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்