பிரான்ஸில் சிறுமிகள் பாதுகாப்பிற்காக கொண்டுவரப்பட உள்ள புதிய சட்டம்

Report Print Kabilan in பிரான்ஸ்
265Shares
265Shares
lankasrimarket.com

பிரான்ஸ் நாட்டில் 15 வயதுக்கு உட்பட்ட சிறுமியை, பாலியல் உறவில் ஈடுபடுத்துவது தவறு என்னும் புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

பிரான்ஸில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க, 13 வயதுக்குட்பட்ட சிறுமியுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வது குற்றம் என்ற சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், சமீபத்தில் 11 வயதான சிறுமிகள் இருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. இதனைத் தொடர்ந்து, ஏற்கனவே கொண்டு வந்திருந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி 15 வயதுக்குட்பட்ட சிறுமியுடன், பாலியல் உறவு வைத்துக் கொள்வது குற்றம் என சட்டம் இயற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான மசோதாவை, அரசின் Women's affairs office இந்த மாதம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்