குழந்தையை திருடி ஐஎஸ் இயக்கத்தில் இணைக்க முற்பட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

Report Print Harishan in பிரான்ஸ்
124Shares
124Shares
lankasrimarket.com

18 மாத குழந்தையை திருடி ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இணைக்க முற்பட்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

துனிசிய நாட்டை பூர்வீமாகக் கொண்டவர் Hamza Mandhouj(29). இவருக்கும் Meriam Rhaiem என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்று கடந்த 2013-ஆம் ஆண்டு பிரிந்துள்ளனர்.

அதன்பின் இருவரும் சந்தித்துக் கொள்ளாத நிலையில் அவரது முன்னாள் மனைவியின் 18 மாத குழந்தையை குறித்த நபர் கடத்தி, பாரிஸ் விமான நிலையம் வழியாக சிரியாவிற்குச் கடத்திச் சென்று ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இணைக்க முற்பட்டுள்ளார்.

அங்கு விமான நிலைய அதிகாரிகளிடம் வசமாக சிக்கிய நிலையில், பங்கரவாத வழக்கு மற்றும் குழந்தை கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் குறித்த நபரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், குறித்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நேற்று பாரிஸ் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்