பிரான்சில் பனிச்சறுக்கில் சிக்கிய வீரர்: இறந்தது போல் உணர்ந்ததாக உணர்ச்சிகர பேட்டி

Report Print Santhan in பிரான்ஸ்
134Shares
134Shares
lankasrimarket.com

பிரான்சில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிக் கொண்டிருந்த வீரர் பனிச்சரிவில் இருந்து சிக்கி உயிர் தப்பிய காட்சிகள் வெளியாகியுள்ளன.

லெபானின் Beirut பகுதியைச் சேர்ந்தவர் Thomas Kray. இவர் கடந்த வாரம் ஞாயிறு அன்று ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பனிபடர்ந்த பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டு விளையாடுவதற்காக சென்றார்.

அபோது அங்கு பனிச்சறுக்கில் சென்று கொண்டிருந்த போது, திடீரென்று பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால் நிலைகுலைந்து போன அவர் பனிகட்டிகளுக்கிடைய மூழ்கினார்.

அதன் பின் முன்னெச்சரிக்கைக்காக பயன்படுத்தப்படும் ஏர்பேக்கினை பயன்படுத்தி வெளியில் வந்துள்ளார். இது தொடர்பான காட்சிகள் அவர் அணிந்திருந்த கேமராவில் பதிவாகியிருந்ததால், தற்போது அந்த வீடியோ வெளியாகியுள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், உண்மையில் கடவுளுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். பனிகட்டுகளுக்கிடையே சிக்கிய நான், கொஞ்சம் கொஞ்சமாக நீரில் மூழ்க ஆரம்பித்தேன்.

அதன் பின் ஏர் பேக்கை பயன்படுத்தி அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தேன், தண்ணீருக்குள் இருந்த போது இறந்தது போன்று உணர்ந்ததாக கூறி, அது தொடர்பான வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்