மனைவியுடன் தாஜ்மஹாலை பார்வையிட்ட பிரான்ஸ் ஜனாதிபதி

Report Print Kavitha in பிரான்ஸ்
201Shares
201Shares
lankasrimarket.com

காதல் நினைவுச்சின்னமான உலகப்புகழ் பெற்ற தாஜ்மஹாலை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் மற்றும் பிரிஜித் மேக்ரோன் இருவரும் பார்வையிட்டுள்ளனர்.

ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள மேக்ரோன் நரேந்திர மோடியை சந்தித்து, அவருடன் நீண்ட நேரம் உரையாடியுள்ளார்.

அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னர், புதுதில்லியில் இருந்து ஆக்ரா பயணத்தை மேற்கொண்டு, இந்தியாவின் முக்கியமான அடையாளமாகவும், உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலுக்கு சென்றுள்ளனர்.

தாஜ்மகாலை பார்வையிட்ட மக்ரோன் தம்பதியினர் அதுகுறித்த வரலாற்று தகவல்களையும் அறிந்துகொண்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்