மாணவர்களுக்கு பிரான்ஸ் முதல் பெண்மணியின் அறிவுறை

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
179Shares
179Shares
lankasrimarket.com

இந்தியா வந்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி மனைவியும் பிரான்சின் முதல் பெண்மணியுமான Brigitte Marie-Claude, வாரணாசியிலுள்ள Rajghat Public School என்னும் பள்ளியையும் Vasanta College என்னும் பெண்கள் கல்லூரியையும் பார்வையிட்டார்.

அங்கு மாணவர்களிடம் உரையாற்றிய அவர், மாணவர்கள் வெற்றி பெற வேண்டுமானால் மற்றவர்களுடன் போட்டி போடுவதை விடுத்து தன்னுடன் தானே போட்டி போட வேண்டும் என்று தெரிவித்தார்.

தற்போதைய கல்வி முறை மாணவர்களுக்கு போதுமான அறிவை வழங்கும் வகையில் அமைந்துள்ளது, என்றாலும் மாணவர்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு புதிய பரிணாமத்தில் வழங்கப்படும் கல்வியும் செயல்முறைக் கல்வியும் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவியும் ஒரு ஆசிரியராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Brigitte Marie-Claude அவர்கள் ஒரு ஆசிரியராக இருந்ததால், மாணவர்களுடன் எளிதாக பழகியதாகவும், அவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் விதத்தில் பேசியதாகவும் Vasanta கல்லூரியின் முதல்வராகிய Dr Alka Singh தெரிவித்தார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்