பாரிஸ் மெட்ரோ ரயில்களில் புதிய இன்டர்நெட் சேவை அறிமுகம்: நிர்வாகம் உறுதி

Report Print Harishan in பிரான்ஸ்

பாரிஸ் மெட்ரோவில் வருகின்ற 2019 முதல் 4G இணைய சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

பாரிஸ் மெட்ரோ ரயில்களில் 4G இணைய சேவை அறிமுகம் செய்யலாம் என கடந்த 2016-ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டு, 2017-ஆம் ஆண்டே நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சில நடைமுறை சிக்கல்களால் தள்ளிப்போக நேரிட்டது.

இந்நிலையில், வரும் 2019-ஆம் ஆண்டில் இந்த திட்டம் கட்டாயம் நடைமுறைப் படுத்தப்படும் என மொட்ரோ நிர்வாகம் உறுதியாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு RATP தகவல் தொழில்நுட்ப இயக்குநர் Michael Cordival கூறுகையில், “2019-ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்குள் 60-க்கும் மேற்பட்ட ரயில் நிலைய சுரங்கப்பாதைக்குள் அதிவேக 4G இணையம் வழங்கிவிடுவோம்”.

மிகவும் சவாலான பணி என்றபோதும் தொடர்ந்து அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. சில நடைமுறைச் சிக்கல்களால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் Michael தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்