பிரான்சில் பள்ளி உணவை சாப்பிட்ட சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

Report Print Kabilan in பிரான்ஸ்
420Shares

பிரான்ஸ் நாட்டில் ஆறு வயது சிறுவன், பள்ளியில் Crêpe எனும் உணவுப் பொருளை சாப்பிட்டதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸின் மத்திய பகுதியில் உள்ள நகரம் Limas. இங்குள்ள பள்ளி ஒன்றில், Jadhen எனும் 6 வயது சிறுவன் படித்து வந்தான்.

இந்நிலையில், கடந்த மார்ச் 26ஆம் திகதி பள்ளியில், Jadhen-க்கு Crêpe எனும் உணவு வழங்கப்பட்டது. இந்நிலையில், பால் சம்பந்தப்பட்ட அந்த உணவால் சிறுவனுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

Jadhen தாய் அவனை வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவன் தனக்கு வாந்தி வருவது போல் உள்ளது என்றும், உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் தாயிடம் கூறியுள்ளான்.

அதனைத் தொடர்ந்து, உடனடியாக மருத்துவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அச்சமயம் Jadhen மூச்சு விட மிகவும் சிரமப்பட்டுள்ளான். மேலும், தனக்கு கடுமையாக வலிப்பதாகவும் கூறியுள்ளான்.

அதன் பின்னர், Anaphylactic shock சிகிச்சை Jadhen-க்கு அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி Jadhen பரிதாபமாக இறந்துவிட்டான்.

இது தொடர்பாக Jadhen தந்தை Fabien கூறுகையில், ‘என் மகன் மூன்று ஆண்டுகளாக அந்த பள்ளியில் படித்து வருகிறான். அவனுக்கு பால் சம்பந்தப்பட்ட உணவுப் பொருட்களால் ஒவ்வாமை ஏற்படும் என்பது பள்ளியில் உள்ள அனைவருக்கும் தெரியும்.

அவனது ஆசிரியருக்கும் இது தெரியும். அப்படி இருந்தும் அவனுக்கு Crêpe உணவை கொடுத்திருக்கிறார்கள். இது மிகவும் மோசமான தவறு என தெரிவித்துள்ளார்.

சிறுவனுக்கு உணவை அளித்த ஆசிரியரை பொலிசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மருத்துவ மற்றும் உளவியல் உதவி மையம் அப்பள்ளியில், குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்