நாய் குட்டிக்கும் பெண்ணுக்கும் ஏற்பட்ட காதல்: நெகிழ்ச்சியான சம்பவம்

Report Print Gokulan Gokulan in பிரான்ஸ்
462Shares
462Shares
ibctamil.com

ஒரு பிரிட்டிஷ் பெண்ணால் வியட்நாம் நாய் இறைச்சி வர்த்தகத்தில் இருந்து காப்பாற்றப் பட்ட நாய்க்குட்டி மீண்டும் தொலைந்து பேஸ்புக் நண்பர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புர்னெமவுத் பகுதியைச் சேர்ந்த 22 வயதான அமீலியா கிளேட்டன் , வியட்நாமில் உள்ள ஹோய் ஆனில் விலங்குகளுக்கான தொண்டு புரியும் ஒரு சேவை மையத்தில் வேலை செய்து வந்தார்.

அந்த வேலையின் போது சந்தித்த நாய்க்குட்டிதான் மார்லின். பிறந்ததிலிருந்து சங்கிலியால் கட்டி வைக்கப்பட்ட மார்லினுக்குத் தெரிந்ததெல்லாம் அடி மற்றும் சித்ரவதை மட்டும்தான்.

அதனாலேயே மனிதர்களைக் கண்டால் அவளுக்கு எப்போதும் பயம். இந்த மாதிரியான சூழலில் மார்லினை அவர் முதல் முதலில் சந்தித்த போதே அவர்களுக்கிடையேயான பந்தம் உருவாகி விட்டது.

அதன்பின்பு அங்கிருந்து மீட்கப்பட்ட மார்லினுக்கான சிகிச்சை மற்றும் போக்குவரத்து செலவினங்களுக்கு பிறகு மார்ச் இறுதியில் இந்த ஜோடி வியட்நாமில் இருந்து கிளம்பியது.

16 மணி நேரப் பயணத்திற்குப் பின் தனது எட்டு மாதத் திட்டம் வீணடையவில்லை என்று சந்தோஷமாய் பாரிசில் கால் வைத்திருகிறார்கள் அமீலியாவும் மார்லினும்.

அங்குதான் இவர்களது ப்ரியத்திற்கான இன்னொரு சோதனை காத்திருந்திருக்கிறது.

மற்ற மீட்பு நாய்களைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம் ஒரு இரண்டு நிமிடம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று இவர் விட்டு சென்ற போதுதான் அந்த விபரீதம் நடந்திருக்கிறது.

மார்லினைக் காணவில்லை, ஏர்போர்ட் முழுவதும் மார்லின் மார்லின் என்று அழைத்தபடியே வெறித்தனமாக ஒன்பது மணி நேரம் தேடிய அமீலியா, அதன் பின்னும் தனது தேடுதலை நிறுத்தவில்லை.

முகநூலில் தொலைந்து போன நாய்களுக்கென ஒரு பக்கம் இருந்ததை அறிந்த அமீலியா அங்கு தனது நாய்க்குட்டி குறித்த விவரங்களைப் பதிவிட்டார்.

9 நாட்கள் முகநூல் நட்புகளின் தீவிர தேடுதல்களுக்குப் பின் மரங்கள் நிறைந்த பகுதியில் இந்தக் கலப்பின நாய்க்குட்டியைக் கண்டுபிடித்துள்ளனர்.

மார்லின் கண்டுபிடிக்கப் பட்ட பிறகான நிகழ்சிகளை அமீலியாவின் வார்த்தைகளால் கேட்கும்போது உயிர் கரையும் நெகிழ்வு ஏற்படுகிறது.

அவை பின்வருமாறு.

அவளைத் தூரத்திலிருந்து பார்த்த அமீலியா மார்லின் என்று மென்மையாக அழைத்த போது, அமீலியாவைக் உணர்ந்த மார்லின் சட்டெனப் பின்னால் விழுந்து விட்டாள், அப்போது என் கண்கள் அழுது கொண்டிருந்தன.

எங்கள் கதையைக் கேட்டு 9 நாளும் எங்களுக்கு உதவிய அத்தனை பேரும் அங்கு வந்து விட்டனர். எங்களின் இந்தக் கணங்கள் பார்த்து அவர்களும் கண்கலங்கினர்.

கடவுளே அது அத்தனை நெகிழ்வானதாய் இருந்தது என்று கூறிய அமிலியா தாங்கள் மீண்டும் uk விற்கு வந்த போது அனைவரும் கண்ணீரோடு வழியனுப்பி வைத்தனர் என்று bbc பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அமீலியாவைப் போலவே மார்லினும் அமீலியாவைத் தேடியிருக்கக் கூடும் பேசத் தெரியாத அந்தப் பிராணியின் தேடலானது அமீலியாவைக் கண்டதும் சந்தோஷத்தை தாங்க முடியாத அதன் அதீத பாசம் அதைக் கீழே விழச் செய்திருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது

உண்மையான நேசத்தின் தேடல்கள் ஒருபோதும் தோல்வியில் முடிவதில்லை.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்