தீவிரவாதத்தை தூண்டினார்: முஸ்லிம் மதகுருவை நாடு கடத்தும் பிரான்ஸ்?

Report Print Gokulan Gokulan in பிரான்ஸ்
59Shares
59Shares
ibctamil.com

தீவிரவாதத்தை தூண்டியவர் என குற்றம்சுமத்தி இஸ்லாமிய மதகுருவான எல் ஹாடி டவுடியை வெளியேற்றும் பிரெஞ்சு அரசாங்கத்தின் முடிவு குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.

பிரான்சின் முன்னணி அடிப்படை இஸ்லாமிய ஆதரவாளரான எல் ஹாடி டவுடி சாதாரண போதகர் மட்டும் இல்லை என்று சொல்லும் பிரெஞ்சு அரசாங்கம், 37 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் யூதர்கள், பெண்கள் மற்றும் நவீன உலகத்தை இழிவாக பேசி வந்துள்ளார் என குற்றம் சுமத்தியுள்ளது.

இஸ்லாமிய தீவிரவாதத்தை நோக்கிய தங்கள் நிலைப்பாட்டை மேலும் கடினப்படுத்தும் வகையில் எமானுவல் மக்ரோன் அரசாங்கம் இந்த மதபோதகரை நாடுகடத்த முனைப்புடன் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அல்ஜீரியாவில் பிறந்த 63 வயதான இமாம் டவுடி ஒரு பிரெஞ்சு குடிமகன் அல்ல எனும் மக்ரோன் நிர்வாகத்தின் கூற்று பொதுவாக இஸ்லாமிய மதகுருமார்களின் ஆய்வுகளை தீவிரப்படுத்தவும், சில சந்தர்ப்பங்களில், அவர்களை வெளியேற்றுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

இவரின் போக்கு குறித்து எச்சரிக்கும் விமர்சகர்கள் குடியேற்றம் போன்ற பகுதிகளில் தலையிடும் மக்ரோனின் அணுகுமுறைகள் கவலைக்குரியவை என்றும் கூறுகின்றனர்.

கடந்த காலத்தில்தீவிரவாதத்திற்கு எதிரான செயல்களில் பிரான்சின் ஈடுபாடு குறைவாகத்தான் இருந்தது என்றும் 2012 முதல் 2015 ஆம் ஆண்டு வரை அதன் செயல்பாடுகளில் 40 மதகுருமார்கள் வெளியேற்றப்பட்ட நிலையில்,

கடந்த 28 மாதங்களில் 52 ஆக இவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பது பிரெஞ்சு அரசாங்கம் தீவிரவாத ஆதரவு பிரச்சாரங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்துவருகிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

கடந்த வாரம் தெற்கு பிரான்சில் ஒரு பல்பொருள் அங்காடியில் பயங்கரவாதத் தாக்குதலில் பிணைக் கைதியாக மாற்றி இறந்த பொலிஸ் அதிகாரியான லெப்டினென்ட் கேல்னை கௌரவிக்கும் ஒரு உரையில் பேசிய மேக்ரான்,

இந்த எதிர்ப்பு பயங்கரவாதத்திற்கானது மட்டும் அல்ல ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு மற்றும் தற்கொலைக்கு தூண்டும் மதகுருமார்களின் போக்கிற்கு, தான் எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறினார்.

இது குறித்து பதிலளித்த மதகுரு, தனது பிரசங்கத்தை அரசாங்கம் கேட்டுக் கொண்டிருப்பது தெரியும் என்றும் அதில் மறைக்க எதுவுமில்லை என்றும், மக்கள் மற்றும் அதிகாரிகளுடனான தனது உறவு எப்போதும் தெளிவானதாகவும், சரியானதாகவும் இருந்து வந்திருகிறது என்கிறார்.

அவர்கள் சலாஃபிஸம் பிரான்சிற்கு ஆபத்து என கூறுவதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்.

இதை மறுக்கும் நிர்வாகம் இமாம் டூடிவின் பிரசங்கங்களை மேற்கோள் காட்டி, "பயங்கரவாத நடவடிக்கைகளைத் தூண்டிவிடும் வகையில் அவர் வெறுப்பு, பாகுபாடு, வன்முறை ஆகியவற்றைப் பிரசங்கிப்பதாக நாங்கள் கருதுகிறோம் " என்றே குறிப்பிடுகிறது.

பாதுகாப்பு அதிகாரிகளுடன் நல்ல உறவு வைத்துள்ளவர் என்கிற பெயர் அவருக்கு இருக்கிறது. திடீரென்று செல்வாக்கு மிகுந்த மதகுரு ஒருவரை நாடு கடத்தினால் அவரை சார்ந்துள்ள மக்கள் ஆதரவற்றவர்கள் என ஆகிவிடுவார்கள் என்று கூறும் அவரது ஆதரவாளர்கள் இது பிரான்சிற்கு ஆபத்து விளைவிக்ககூடிய முடிவு என்கின்றனர்.

இருதரப்பிலும் பரஸ்பர நியாயங்கள் பேசப்படுகின்ற நிலையில், இறுதி தீர்ப்பை மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்