பிரான்சில் அதிர்வலைகளை ஏற்படுத்திய கொலை வழக்கு: 6 பேர் கைது

Report Print Athavan in பிரான்ஸ்
141Shares
141Shares
ibctamil.com

பிரான்சில் பொலிஸ் அதிகாரி மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய 6 நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், பாரிசுக்கு மேற்கில் அமைந்திருக்கும் Magnanville பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அத்துமீறி நுழைந்து அங்கு இருந்த பொலிஸ் அதிகாரி மற்றும் அவரது மனைவியை கொலை செய்தார்.

அதோடு இல்லாமல் அந்த கொடூர சம்பவத்தை வீடியோவில் பதிவு செய்து, IS தீவிரவாதக் குழுவுக்கு ஆதரவான கருத்துக்ளை கூறியபடியே, கொலை செய்த வீடியோ காட்சிகளை ஒன்லைனில் பதிவிட்டார்.

அப்போது குறித்த பகுதிக்கு விரைந்த பொலிசார், குற்றவாளியை சுட்டுக் கொன்றனர், அதிர்ஷ்டவசமாக இச்சம்பவத்தின் போது பலியான தம்பதியினரின் மூன்று வயது மகன் மட்டும் உயிர் தப்பினார்.

கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இக்கொலை வழக்கில் விசாரணை நடத்தி வந்த பொலிசார், தற்போது 6 நபர்களை கைது செய்துள்ளனர்.

இவர்களில் யார் கொலை செய்ய உதவியது? திட்டமிட்டது எப்படி? என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட 6 பேரில் 3 பேர் ஆண்கள் மற்றும் 3 பேர் பெண்கள் ஆவர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்