ரஷ்யாவுடன் மோதல் போக்கை விரும்பவில்லை: பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர்

Report Print Athavan in பிரான்ஸ்
296Shares
296Shares
lankasrimarket.com

பிரான்ஸ் ரஷ்யாவுடன் மோதல் போக்கை விரும்பவில்லை, சிரியாவில் இருக்கும் அபாயகரமான ரசாயண ஆயுதங்களை உற்பத்தி செய்யும் கிடங்குகளை அழிப்பதற்காக மட்டுமே பிரான்ஸ் அதன் கூட்டுபடைகளுடன் இணைந்து சிரியாவில் தாக்குதல் நடத்துகிறது என பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த 7ந்தேதி அந்நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே கிழக்கு கூட்டா பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையிலான ரசாயன தாக்குதலில் 70 பேர் பலியாகி உள்ளனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் கூட்டுபடைகள் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் ஹோம்ஸ் மாகாணத்தில் ரசாயன ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் இடங்கள், சிரியாவின் ஆயுத கிடங்குகள் மற்றும் ராணுவ முகாம்களை துல்லியமாக குறிவைத்து இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியது.

எனவே, இதன்காரணமாக ரஷ்யாவுடன் முரண்பாடுகளை வளர்க்கவும், மோதல் போக்கை கடைபிடிக்கவும் பிரான்ஸ் அரசு விரும்பவில்லை எனவும், இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் ரஷ்ய வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க தாக்குதல் பற்றி முன்கூட்டியே ரஷ்யாவிற்கு தகவல் அளிக்கப்பட்டது என்றும் இன்று செய்தியாளர்களிடம் பிரான்ஸ் பாதுகாப்புதுறை அமைச்சர் FLORENCE PARLY தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்