அவற்றை சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்: ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
400Shares
400Shares
lankasrimarket.com

பொது இடங்களில் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவதை தான் விரும்பவில்லை என்றாலும் அவற்றை சகித்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் ஒரு நாடு எனவும் பர்தா அணிவதை பெண்ணினத்தின்மீது காட்டப்படும் அடக்குமுறையாக பார்ப்பதாலேயே அதைக் குறித்த விவாதங்கள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசியலையும் மதத்தையும் தனித்தனியாக பார்க்கும் பிரான்ஸ் மதச்சார்பின்மையை உறுதியாகக் கடைப்பிடிக்கும் நாடாகும்.

2004 ஆம் ஆண்டு முதல் பள்ளிகளில் headscarf அணிவதற்கு இருந்த தடையை மேக்ரான் நீக்கினார் என்றாலும் இஸ்லாமிய பெண்கள் பொது இடங்களில் முகம் முழுவதையும் மறைக்கும் பர்தா அணிவதற்கு 2011 முதல் தடை விதித்தார்.

பர்தா அணிந்த பெண்களை தான் மதிப்பதாகக் கூறும் மேக்ரான், அவர்கள் விரும்பிதான் அதை அணிகிறார்கள், கட்டாயத்தின்பேரில் அல்ல என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.

பர்தா அணிந்தவர்களால் மற்றவர்களுக்கு அசௌகரியமான சூழல் ஏற்படுவதாகக் கூறும் அவர், அவை பிரான்ஸின் நாகரீக சமுதாயத்திற்கு பொருந்தவில்லை என்றார்.

பிரான்ஸ் நாடு மதச்சார்பற்றதுதான் என்றாலும் மொத்த பிரான்ஸ் சமுதாயமும் மதச்சார்பற்றது அல்ல, இஸ்லாமிய பெண்கள் தாங்கள் விரும்புவதை அணிய அனுமதிக்கப்படவேண்டும் என்றும் அவர் கூறினார்.

இஸ்லாமிய தீவிரவாதம் இஸ்லாம் அல்ல என்பதை மக்கள் புரிந்துகொள்ளச் செய்யவேண்டும் என்று கூறியுள்ள அவர், பிரான்ஸ் இளைஞர்கள் தீவிரவாதத்தைப் பின்பற்றுவது அரசு எதிர்கொள்ளும் பெரிய சவால்களில் ஒன்று என்றும் கூறினார்.

GETTY

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்