கடுமையான குடியேற்ற மசோதாவை நிறைவேற்றிய பிரான்ஸ்

Report Print Trinity in பிரான்ஸ்

60 மணி நேர விவாதம், 139 வாக்குகள் நூற்றுக்கணக்கான திருத்தங்களுக்கு பின்னர் பிரான்சிற்கு குடிபெயரும் அகதிகளுக்கு கடுமையான குடியேற்ற சட்டங்களை விதித்துள்ளது பிரெஞ்சு தேசிய நீதிமன்றம்.

இதன்படி சட்டவிரோதமாக குடியேறியவர்களைத் தடுத்து வைக்கக்கூடிய நேரத்தை இரட்டிப்பாக்குதல், பிரான்சில் சட்டவிரோதமாக நுழைவதற்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை போன்ற முறைகள் அறிமுகப்படுத்துகிறது.

பிரெஞ்சு அரசின் இந்த முடிவு அகதிகளுக்கு சாதகமாக இல்லை எனும் நிலையில் இதற்கு எதிராக வாக்களித்துவிட்டு பாராளுமன்ற குழுவிலிருந்து விலகுவதாகவும் அறிவித்திருக்கிறார் சோசலிஸ்ட் கட்சியின் முன்னாள் உறுப்பினரான திரு கிளெமென்ட்.

சட்டத்தின் முக்கிய நோக்கம் அகதி விண்ணப்பங்களின் நீளத்தை குறைப்பதும், நிராகரிக்கப்பட்டவர்களுக்காக நாடுகடத்தல் அமைப்பை இன்னும் திறம்பட செய்வதும் ஆகும். ஆனால் மசோதா அதற்கு எதிராக செயல்படுவதாகவும் எதிர்ப்பாளர்கள் தெரிவித்தனர்.

விண்ணப்பதாரர்களுக்கு ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்ய 90 நாட்களும் மேலும் நிராகரிக்கப்படுவதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய ,இரண்டு வாரங்கள் காலக்கெடு விதித்துள்ளனர்.

இடதுசாரி கட்சிகள் இந்த மாற்றங்களுக்கு ஆழ்ந்த எதிர்ப்பைக் காட்டின. வலதுசாரி குடியரசு கட்சிகள் அவர்களுடன் இணைந்தன. இந்நிலையில் வலதுசாரி தேசிய முன்னணி சில நடவடிக்கைகளை ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த மசோதா வரும் ஜூன் மாதத்தில் செனட் சபையில் மேல் விவாதத்தில் விவாதிக்கப்படும்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்