பாரிஸ் தாக்குதல் தீவிரவாதிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

பாரிஸ் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவரான Salah Abdeslam என்பவருக்கு பெல்ஜியம் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் ஐ.எஸ் ஆதரவு பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைவெறி தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த கொடூர சம்பவத்தை அடுத்து தலைமறைவான பயங்கரவதி Salah Abdeslam பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் புறநகர் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டார்.

குறித்த சம்பவத்தின்போது பொலிசார் மீது தாக்குதல் நடத்தப் பட்டதில் 4 பொலிசார் கொல்லப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பில் வழக்கு விசாரணை பெல்ஜியம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதில் இருதரப்பு விசாரணைகள் முடிவடைந்த நிலையில் நீதிமன்றம் பயங்கரவாதி Salah Abdeslam-கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பிரஸ்ஸல்ஸ் புறநகர் பகுதியில் தேடுதல் வேட்டையில் இறங்கிய பொலிசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் 4 பொலிசார் சம்பவயிடத்தில் கொல்லப்பட்டனர். மட்டுமின்றி பாரிஸ் தாக்குதலில் தொடர்புடைய நபர்களால் 2016 மார்ச் மாதம் 22 ஆம் திகதி பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் 32 பேர் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.

தற்போது பிரான்ஸ் சிறையில் இருக்கும் Salah Abdeslam பாரிஸ் தாக்குதல் தொடர்பாக விசாரணையை எதிர்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers