பிரான்ஸ் ஜனாதிபதியின் பொடுகை தட்டிவிட்ட டிரம்ப்! கட்டியணைத்துக் கொண்ட சகோதர பாசம்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானுக்கு ஜனாதிபதி டிரம்ப் சிறப்பான வரவேற்பை அளித்துள்ளார்.

ஓவல் அலுவலகத்தில் இரு தலைவர்களும் சந்தித்த போது ஜனாதிபதி மேக்ரானின் கோட் மீது படிந்திருந்த பொடுகு(dandruff) துகள்களை தட்டிவிட்ட டிரம்ப், மேக்ரானை சிறப்பிப்பது நமது கடமை என்றும், அவர் சிறப்பானவர் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

திங்களன்று மதிய நேரம் அமெரிக்கா சென்றடைந்த பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானுக்கு அமெரிக்காவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி டிரம்ப் மற்றும் மேக்ரான் இருவரும் கட்டி அணைத்து சகோதர பாசத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் வெள்ளை மாளிகையில் மரக்கன்று ஒன்றை நட்டு மேக்ரான் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டின் பரிசு என குறிப்பிட்டுள்ளனர்.

பின்னர் இருவரும் அமெரிக்க சிறப்புப் படையான மரைன் வன் ஹெலிகொப்டரில் அமெரிக்க தலைநகர் வாசிங்டனை சுற்றிப்பார்த்துள்ளனர்.

செவ்வாய் அன்று அரசு முறை நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட மேக்ரான் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இருவரும் மீண்டும் கட்டி அணைத்து தங்கள் அன்பை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

அப்போது ஊடகங்களிடம் பேசிய டிரம்ப், பிரான்ஸ் நாட்டின் அசைக்க முடியாத ஜனாதிபதியாக மேக்ரான் உருவெடுப்பார் என்றார்.

பின்னர் விழா முடிந்து இருவரும் ஓவல் அலுவலகத்தில் நடந்து செல்கையில் இரு தலைவர்களும் கரங்களை கோர்த்து நடந்து சென்றுள்ளனர்.

இருப்பினும் இரு தலைவர்களும் முக்கிய விடயங்களில் இன்னும் ஒருமித்த கருத்தை எட்டவில்லை என சர்வதேச பார்வையாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers