பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்க இணையும்: ஜனாதிபதி மேக்ரான்

Report Print Fathima Fathima in பிரான்ஸ்

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா மீண்டும் இணையும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு தனது மனைவியுடன் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான்.

இரு நாடுகளின் தலைவர்களும் தங்களுக்குள் சகோதரத்துவத்தை வெளிப்படுத்திய நிலையில், ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தம் குறித்து முக்கியமாக விவாதித்தனர்.

இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா மீண்டும் இணையும் என பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், நம் குழந்தைகளின் எதிர்காலத்தை தியாகம் செய்து இந்த உலகத்தை அழித்துக் கொண்டிருக்கிறோமா? கரியமில வாயுக்களை வெளியிட்டு பல்லுயிர் தன்மையை அழிக்கிறோம்.

வேறொரு உலகம் இல்லை, நிச்சயமாக இதில் அமெரிக்கா மீண்டும் இணையும், சுற்றுச்சூழலை பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers