ஆப்பிரிக்க ஊழல் வழக்கு விசாரணையில் பிரான்ஸ் கோடீஸ்வரர்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

ஆப்பிரிக்க ஊழல் தொடர்பாக விசாரணை வளையத்திற்குள் பிரான்ஸ் கோடீஸ்வரர் Vincent Bolloré கொண்டுவரப்பட்டிருக்கிறார்.

இரண்டு ஆப்பிரிக்க அதிபர்கள் ஆட்சிக்கு வருவதற்கு Bolloré உதவியதாகவும் பதிலுக்கு தொழில் முறை ஒப்பந்தங்கள் பெற அவர்கள் உதவியதாகவும் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து விசாரணை வளையத்திற்குள் Bolloré கொண்டுவரப்பட்டிருக்கிறார்.

அவரது Havas விளம்பர ஏஜன்சி கினியா அதிபர் Alpha Condé மற்றும் Togolese அதிபர் Faure Gnassingbé ஆகியோருக்கு 2009 மற்றும் 2010 ஆண்டுகளில் அதிபர் பதவியைப் பிடிப்பதற்கு உதவியதாகவும் பதிலுக்கு Conakry மற்றும் Lomé ஆகிய இடங்களில் கண்டெய்னர் துறைமுகங்களை நிர்வகிக்க Bolloréஇன் Bolloré Africa Logistics நிறுவனத்திற்கு லைசன்ஸ் பெற்றுக்கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆனால் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அவர்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.

Bolloré குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் Bolloré குற்றமற்றவர் எனவும் தங்களிடம் போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும் தங்கள்மீது கூறப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு விடையளிக்க தங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

துறைமுக ஒப்பந்தங்கள் குறித்து எழுந்துள்ள பிரச்சினையால் போட்டி நிறுவனங்கள் இரண்டு Bolloré குழுமத்தை நீதிமன்றத்திற்கு இழுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏனென்றால் கினிய அதிபர் பொறுப்பேற்றதும் ஏற்கனவே துறைமுக நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டிருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு அதை Bolloré குழுமத்திற்கு வழங்கினார்.

இவ்வாறு செய்ததில் எந்த தவறும் இல்லை என்று கினியாவின் அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...