சரமாரியாக சுட்டுவிட்டு தப்பியோடிய மர்ம நபர்: பிரான்ஸில் சம்பவம்

Report Print Kavitha in பிரான்ஸ்
134Shares
134Shares
lankasrimarket.com

பிரான்சின் பாரிசில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

பாரிசின் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள வீதி ஒன்றில் வியாழக்கிழமை நள்ளிரவன்று நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பைக்கில் வேகமாக வந்த மர்ம நபர் ஒருவர், காருக்குள் இருந்த நபரை நோக்கி சரமாரியாக சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளார்.

மேலும் துப்பாக்கி சூட்டின் போது மூன்று துப்பாக்கிச்சூடுகள் கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒரே ஒரு துப்பாக்கி குண்டு மட்டும் நபரை நோக்கி பாய்ந்ததாகவும், ஆனால் அதிஷ்ட்டவசமாக துப்பாக்கிக்குண்டு கைக்கடிகாரத்தில் பட்டு தடுக்கப்பட்டதாகவும், சில குறைந்தளவு காயங்களுடன் உயிர்பிழைத்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் பண கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதேபோன்றும் இரு நாட்களுக்கு முன் நபர் ஒருவர் சுடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்