நாங்கள் ஒப்பந்தத்தில் நீடிக்கிறோம்: ஈரான் ஒப்பந்தம் குறித்து பிரான்ஸ்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
130Shares
130Shares
ibctamil.com

பிரான்ஸ் வெளியுறவு அமைச்சரான Jean-Yves Le Drian, ஈரான் அணு ஒப்பந்தம் முடிந்துபோகவில்லையென்றும், அமெரிக்காதான் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியுள்ளதே தவிர தாங்கள் ஒப்பந்தத்திலேயே தொடர்வதாகவும், இது குறித்து ஈரான் அதிபருடன் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் பேச இருப்பதாகவும் தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு உலகின் வலிமை மிக்க நாடுகளுடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் தொடர்ந்து பங்கு வகிக்க பிரான்ஸ் விரும்புவதாகவும், ஈரான் தொடர்ந்து ஒப்பந்தத்தை கௌரவித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒப்பந்தம் இறக்கவில்லை, அமெரிக்கா ஒப்பந்தத்தை விட்டு வெளியேறியுள்ளதே தவிர ஒப்பந்தம் இன்னும் தொடரத்தான் செய்கிறது என்று அவர் தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டின் ஒப்பந்தமானது அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா, ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இணைந்து செய்துகொண்ட ஒரு ஒப்பந்தமாகும்.

ஈரான் தனது அணு ஆயுத சோதனைகளை குறைத்துக்கொள்ளும் என்ற வாக்குறுதியின்பேரில் பதிலுக்கு அதன் மீதான தடைகளை விலக்கிக் கொள்வது என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஈரானை அணு ஆயுதம் செய்யாமல் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதற்கிடையில் செய்யக்கூடாத ஒரு ஒப்பந்தததை செய்து விட்டதாகவும் அதிலிருந்து வெளியேறி மீண்டும் ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க உள்ளதாகவும் ஈரானுக்கு உதவும் மற்ற நாடுகள் மீதும் தடைகள் விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று கூறியிருந்தார்.

பிரித்தானியா, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஏற்கனவே அமெரிக்காவிடம் ஒப்பந்தத்தில் தொடர்ந்து இணைந்திருக்க விரும்பும் நாடுகளுக்கு பிரச்சனைகள் ஏற்படுத்தும் எந்த நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டாம் என்று வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்